search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சித்தி விநாயகர் கோவிலில்"

    • சித்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • பரிவார மூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா சடையம்பட்டி கிராமத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கி பூர்ணாகுதி உள்ளிட்ட முதற்கால யாக வேள்வி பூஜைகள் துவங்கியது.

    அதனைத் தொடர்ந்து இரண்டாம் கால யாக பூஜை கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள யாகசாலை பந்தலில் ஞானசேகர சிவாச்சாரியர், மணிகண்ட சிவாச்சாரியர் ஆகியோர் தலைமையில் காசியிலிருந்தும் ராமேஸ்வரத்திலிருந்தும் எடுத்து வரப்பட்ட புனித நீர் குடத்தை வைத்து

    யாகசாலையில் யாக வேள்வி பூஜைகள் நடத்தி பின்பு பூசிவாச்சாரியார்கள் புனிதநீர் குடத்தை தலையில் சுமந்து கோவிலை சுற்றி கொண்டு வரப்பட்டு விமான கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றி சிவாச்சாரியர்கள் கும்பாபிஷேகம்

    செய்தனர். தொடர்ந்து சித்திவிநாயகர் கோவிலின் மூலஸ்தான கோபுரத்தில் கிழ் கருவறையிலுள்ள சித்தி விநாயகருக்கும் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் செய்தனர். பின்பு சிவன்,

    நந்தி, நவக்கிரகங்கள், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, விஷ்ணு உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது.

    இந்த விழாவில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


    ×